சுடச்சுட

  

  அமேதி தொகுதி: ராகுல் காந்தி 7600 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

  By DIN  |   Published on : 23rd May 2019 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul_Gandhi

  அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 7600 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக கூட்டணி 325 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

  அதில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 7600 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். 

  அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai