சுடச்சுட

  
  jagan

   

  ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

  மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலைப் பெற்றுள்ளது.

  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.

  இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 152 பேரவைத் தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் 22 இடங்களிலும், ஜன சேனா 1 இடத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளன. 

  இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai