சுடச்சுட

  
  jaithat


  மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர் ஜெய்தத் கிஷர்சாகர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ள அவர், சிவசேனையில் இணைய முடிவெடுத்துள்ளார்.
  மராத்வாடா பகுதியின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவர் தனது விலகல் குறித்து கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே, இதற்கு மேலும் கட்சியில் நீடிப்பது எனது சுயகெளரவத்தைப் பாதிக்கும் என்றார். கிஷர்சாகர், மகாராஷ்டிர மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் பீட் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக உள்ளார்.
  மும்பையில் உள்ள சிவசேனை தலைமையகத்தில் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனையில் கிஷர்சாகர் விரைவில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அவரது விலகல், மராத்வாடா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தேசியவாத காங்கிரஸின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தனஞ்ஜெய் முண்டேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர் மறைந்த பாஜக மூத்த தலைவர் கோவிநாத் முண்டேவின் உறவினராவார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai