சுடச்சுட

  
  naveenpatnaik

   

  ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் முன்னிலைப் பெற்றுள்ளது.

  மக்களவைத் தேர்தலுடன் ஒடிஸா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா தளம் முன்னிலைப் பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.

  147 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிஸாவில் 146 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.

  இதில் ஆளும் பிஜூ ஜனதா தளம் 103 பேரவைத் தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளன. இதர கட்சிகள் 3 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளன.

  இந்நிலையில், பிஜூ ஜனதா தளக் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் அங்கு 5-ஆவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai