Enable Javscript for better performance
கோடை சீசன்: புதிய விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோடை சீசன்: புதிய விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவிப்பு

    By DIN  |   Published On : 23rd May 2019 01:19 AM  |   Last Updated : 23rd May 2019 01:19 AM  |  அ+அ அ-  |  

    airindia


    கோடை விடுமுறையில் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அடுத்த மாதம் முதல் புதிய விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
    கோடை விடுமுறையில் விமானப் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ளது. இதைப் பூர்த்தி செய்வதற்காக, அடுத்த மாதம் முதல் புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
    அதன்படி, மும்பை-துபை-மும்பை இடையே ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய விமானங்கள் இயக்கப்படும்.  இதன் மூலம், வாரம் ஒன்றுக்கு கூடுதலாக 3,500 இருக்கைகள் உருவாக்கப்படும். அதுமட்டுமன்றி, தில்லி-துபை-தில்லி இடையே ஜூன் 2 முதல் புதிய விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம், வாரம் ஒன்றுக்கு கூடுதலாக 3,500 இருக்கைகள் உருவாக்கப்படும்.
    தில்லியில் இருந்தும், மும்பையில் இருந்தும், துபைக்குச் செல்வதற்கான கட்டணம் ரூ.7,777-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை, வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கிடைக்கும்.
    உள்நாட்டு போக்குவரத்தில், போபால்-புணே-போபால் வழித்தடத்திலும், வாராணசி-சென்னை-வாராணசி வழித்தடத்திலும் ஜூன் 5 முதல் புதிய விமானங்கள் இயக்கப்படும்.
    தில்லி-போபால்-தில்லி இடையே தற்சமயம் வாரம் ஒன்றுக்கு 14 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை 20-ஆக உயர்த்தப்படும். இதேபோல், தில்லி-ராய்ப்பூர்-தில்லி வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை, 7-இல் இருந்து 14-ஆக அதிகரிக்கப்படும்.
    இதேபோல், தில்லி-பெங்களூரு-தில்லி, தில்லி-அமிமிருதசரஸ்-தில்லி, சென்னை-ஆமதாபாத்-சென்னை, சென்னை-கொல்கத்தா-சென்னை, தில்லி-வதோதரா-தில்லி, மும்பை-விசாகப்பட்டினம்-மும்பை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிகை உயர்த்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp