சுடச்சுட

  

  தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே ஆட்சியமைப்பது குறித்து பேச்சு: எதிர்க்கட்சிகள் முடிவு

  By DIN  |   Published on : 23rd May 2019 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகே, ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
  மத்தியில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக, அக்கூட்டணியில் இல்லாத கட்சிகள் முயன்று வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அடிக்கடி கூடி ஆலோசித்து வருகிறார்கள்.
  இதனிடையே, நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இந்த கணிப்புகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர்.
  இதுகுறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் புதன்கிழமை கூறுகையில், மக்களவைத் தேர்தலில் ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்  என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai