சுடச்சுட

  

  பாஜக-வுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்: அத்வானி

  By DIN  |   Published on : 23rd May 2019 05:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  advani,_modi

   

  2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

  இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

  இந்தியா போன்ற மிகப்பெரிய வேற்றுமையில், ஒற்றுமை நிறைந்த நாட்டில் தேர்தல் வெற்றிகரமாக நடந்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்துக்கும், அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டின் எதிர்காலம் ஒளிமையமாக அமைய நான் ஆசிர்வதிக்கிறேன்.

  பாஜக-வுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு வாக்காளரிடமும் கட்சியை கொண்டு சேர்த்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இதற்காக கடினமாக உழைத்துள்ளனர் என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai