சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மண்ணை கவ்வும்:  தினேஷ் சர்மா 

  By DIN  |   Published on : 23rd May 2019 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dineshsharma


  மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி மண்ணை கவ்வும் என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தினேஷ் சர்மா தெரிவித்தார்.
  இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
  மக்களவைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பது சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நன்குத் தெரியும். இதனால்தான், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை மகிழ்ச்சிப்படுத்த அவரை பிரதமராக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்து வருகிறார்.
  மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் சமாஜவாதி கட்சி, மாயாவதியை பிரதமராக்க வேண்டும் என்று எப்படி தெரிவிக்க முடியும்? இதிலிருந்து அகிலேஷ் யாதவ் பகல் கனவு காண்பது தெரியவரும்.
  வாக்குகளை பிரிக்கும் சக்தியாக திகழ்வதை காங்கிரஸ் கட்சியே ஒப்புக் கொண்டுவிட்டது. அக்கட்சியின் தலைவர்கள், வெளிநாட்டு பயணங்கள் செய்வதில் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பிரசாரம் என்பது சுற்றுலா செல்வது போன்றதாகும்.
  தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டதால், தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விமான டிக்கெட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
  தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். அப்போது நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் ராகுல் காந்தி மீறினார். இதேபோல், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, மத்திய அமைச்சரவையின் குறிப்பை ராகுல் காந்தி கிழித்து எறிந்தார். இதன்மூலம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் அவமதித்து விட்டார். ஆதலால், நாகரிகம் என்றால் என்ன? என்பது குறித்து ராகுல் காந்தி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தினேஷ் சர்மா கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai