சுடச்சுட

  
  modi_water

   

  மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

  மோடியின் 2.0 ஆட்சிக்கு இந்திய மக்கள் ஏகோபித்த ஆதரவை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

  அதிலும் சில மாநிலங்கள் சிந்தாமல் சிதராமல் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றிக் கனியை பரிசளித்துள்ளன.

  அவைகளாவன: (இவை அனைத்தும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில்)

  உத்தரகாண்ட் - மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தேசிய ஜனநயாகக் கூட்டணிக்கே வெற்றிக் கொடி.

  திரிபுரா - மொத்தமிருந்த 2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்று மக்களவைக்குச் செல்கிறார்கள்.

  ராஜஸ்தான் - மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் ஒரு தொகுதியைக் கூட விட்டு வைக்காமல் தேஜகூ வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளது.

  இமாச்சல் - 4க்கு நான்கு என அனைத்தையும் வாரி பாஜகவுக்குக் கொடுத்துள்ளனர் இமாச்சல் மக்கள்.

  குஜராத்- சொல்லவே வேண்டாம், மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி.

  கோவா, சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபார், டாமன் மற்றும் டையுவில் இருந்த தலா ஒரு தொகுதிகளில் பாஜகவுக்கே வெற்றி

  தில்லியில் மகத்தான வெற்றி - மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

  அருணாச்சலப் பிரதேசம் (2 தொகுதிகளில் பாஜக), ஜம்மு காஷ்மீரில் (3 தொகுதிகளில் பாஜக) வெற்றி வாகைச் சூடியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai