சுடச்சுட

  

  ராகுல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: ஜெகன்மோகன் ரெட்டி

  By DIN  |   Published on : 23rd May 2019 07:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  JaganYatra

   

  முதலில் மிகப்பெரிய வெற்றிபெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு மாநிலத்தின் முதல்வராக மத்திய அரசுடன் சுமூகமாகப் பயணிக்க விரும்புகிறேன். ஆந்திராவின் முக்கியக் குறிக்கோளாக சிறப்பு அந்தஸ்து பெறுவதாக தான் உள்ளது. எனவே இவ்விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன். 

  இதுநாள் வரை சந்திரபாபு நாயுடு தான் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்தை தடுத்து வந்தார். ஆனால், இனியும் அது நடக்காது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தருவேன். 

  காங்கிரஸ் தலைவர் ராகுலைப் பொருத்தவரையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தங்களுடைய நம்பகத்தன்மையைப் பெற்றவரைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள். அதுபோன்று தான் எங்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நம்பகத்தன்மை இல்லாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டனர். விரைவில் நான் ஆந்திர முதல்வராக பதவியேற்க ஒரு நன்நாளை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பேன் என்று தெரிவித்தார். 

  ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 இடங்களிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 25-இலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai