17 மாநிலங்களில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் கிடைத்துள்ளது: அமித் ஷா

2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. 
17 மாநிலங்களில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் கிடைத்துள்ளது: அமித் ஷா

2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து உரையாற்றினர். இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:

இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. கடந்த 50 ஆண்டுகளில் தற்போது தான் அரிதிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரையில் அவர் இந்த முயற்சியை தனக்காக வாக்கு சேகரிக்க பயன்படுத்தியிருந்தால் தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்திலாவது வென்றிருக்கும்.

ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அந்த வகையில் 17 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றுத்தந்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் அந்த 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. அதிலும் அவர்களுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் கிடைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைகளுக்கு மத்தியிலும் மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளோம். இன்னும் சில காலத்திற்குள் மேற்கு வங்கத்தில் மொத்தமாக வெற்றிபெறுவோம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com