சுடச்சுட

  

  25 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி? சிக்கிம் பேரவைத் தேர்தலில் கடும் போட்டி

  By DIN  |   Published on : 23rd May 2019 01:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pawan_Kumar_Chamling

   

  சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் எஸ்டிஎஃப், எஸ்கேஎம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

  மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக உள்ள எஸ்டிஎஃப் முன்னிலைப் பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.

  32 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத் தேர்தலில் எஸ்டிஎஃப், எஸ்கேஎம், பாஜக, காங்கிரஸ் மற்றும் கால்பந்து வீரர் பௌசிங் பூட்டியாவின் ஹெச்எஸ்பி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.

  இதில் எஸ்டிஎஃப், எஸ்கேஎம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 1994-ல் இருந்து 25 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் எஸ்டிஎஃப் கட்சி 14 இடங்களிலும், எஸ்கேஎம் கட்சி 12 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai