சுடச்சுட

  

  ஒவ்வொரு பாஜக தொண்டரின் உறுதிக்கும் வணக்கம்: மோடி உருக்கம் 

  By DIN  |   Published on : 23rd May 2019 05:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

   

  புது தில்லி: ஒவ்வொரு பாஜக தொண்டரின் உறுதிக்கும் வணக்கம் என்று பிரதமர்  மோடி ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

  நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

  இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.

  இந்நிலையில் ஒவ்வொரு பாஜக தொண்டரின் உறுதிக்கும் வணக்கம் என்று பிரதமர்  மோடி ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:

  நன்றி இந்தியா! எங்கள் கூட்டணி மீது வைக்கப்பட்ட நம்பிக்கையானது எங்களை பெருமை கொள்ளச் செய்வதுடன், மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற கடினமாக உழைப்பதற்கான வலிமையை அளிக்கிறது.

  ஒவ்வொரு பாஜக தொண்டரின் உறுதிக்கும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பிற்கு எனது வணக்கம். அவர்கள் வீடு வீடாகச் சென்று எங்களது வளர்ச்சித்  திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

  இவ்வாறு அவர் பதிவிட்டுளளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai