வாராணசியில் முந்துகிறார் மோடி; ராகுல் வயநாட்டில் முன்னிலை - அமேதியில் இழுபறி

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாராணசியில் முந்துகிறார் மோடி; ராகுல் வயநாட்டில் முன்னிலை - அமேதியில் இழுபறி

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் காலை 9.50 மணி நிலவரப்படி பாஜக 329 மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 3வது ஆணியில் உள்ள கட்சிகள் 94 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

மக்களவைத்  தேர்தலுடன் ஒடிஸா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது.

முதல் முறையாக இந்த தேர்தலில் தான் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட உள்ளன.

இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் 5 அல்லது 6 மணி நேரம் தாமதமாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

10.06 மணி நிலவரப்படி வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
காலை 8.56 மணி நிலவரப்படி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

காலை 9.30 மணி நிலவரப்படி அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி,  ராகுல் காந்தியை விட 2500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com