சுடச்சுட

  

  மக்களவைக்கு அதிக பாஜக கூட்டணி உறுப்பினர்களை அனுப்பவிருக்கும் மகாராஷ்டிரா

  By PTI  |   Published on : 23rd May 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  UddhavThackeray_ShivSena_Twitter

  புகைப்படம்: டிவிட்டர்/சிவசேனா

   

  மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இதில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

  பாஜக 23 தொகுதிகளிலும், சிவ சேனை 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

  கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது.

  இந்த ஆண்டு இதை விட அதிக இடங்களைப் பிடித்து, உத்தரப்பிரதேசத்தை (80) தொடர்ந்து அதிக பாஜக கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாகியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai