மக்கள் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்: ராகுல் காந்தி

மக்கள் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்: ராகுல் காந்தி

மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 


மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அரியணையில் அமர தயாராகி வருகிறது. காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 90 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து மிகப் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருவது கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  

"மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள். மக்கள் தங்களது முடிவை தெளிவாக தெரிவித்துள்ளார்கள். மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை. நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று மக்கள் தேர்வு செய்துள்ளனர். ஒரு இந்தியனாக அதை நான் மதிக்கிறேன். அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிருதி இராணிக்கு வாழ்த்துகள். இந்த தீர்ப்பு குறித்து ஆழமாக பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. இது பிரதமரை தேர்வு செய்துள்ள தினம். அதற்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com