அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறது தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மர்மங்களின் முன்னோடியாகத் திகழ்ந்து, அரசமைப்புச் சட்டத்தைத் தேர்தல் ஆணையம் மீறி வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறது தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மர்மங்களின் முன்னோடியாகத் திகழ்ந்து, அரசமைப்புச் சட்டத்தைத் தேர்தல் ஆணையம் மீறி வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் எதிர்ப்புகளைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்யாத விவகாரத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், தனிப்பட்ட முறையில் இயங்குவதாகக் கூறி, மர்மங்களின் முன்னோடியாக மாற தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தைத் தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மீறி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே முறையாக இல்லையெனில், நாட்டில் நடத்தப்படும் தேர்தல்கள் நேர்மையுடனும், நியாயமாகவும் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்களை அண்மையில் ஆய்வுசெய்த தேர்தல் ஆணையம், அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தது. இதற்குத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தை நெறிமீறல்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய லவாசா, இதுதொடர்பாக இனி நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்: முன்னதாக, லவாசாவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையர்கள் தலைமையிலான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் இடம்பெறும். ஆனால், அந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிடும் இறுதி அறிக்கையில் தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பு விவரங்கள் இடம்பெறாது எனப் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப்படி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் தொடர்பான செய்திகளைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பொதுமக்கள் பெறமுடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com