அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக

அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது.
அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக

அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக முன்னிலைப் பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.

60 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், ஜேடி(யு), ஜேடி(எஸ்) மற்றும் மாநிலக் கட்சிகளான பிபிஏ, என்பிபி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.

இதில் ஆளும் பாஜக 15 பேரவைத் தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. என்பிபி 2 இடங்களிலும், ஜேடி(யு) 1 இடத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே 3 பேரவைத் தொகுதிகளில் பாஜக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com