பாலகோட் நடைபெறாமல் இருந்திருந்தால்! ஒமர் அப்துல்லா

பாலகோட் சம்பவத்துக்குப் பிறகு எதிர்கட்சிகள் தங்கள் வேகத்தை இழந்துவிட்டது என்று ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 
பாலகோட் நடைபெறாமல் இருந்திருந்தால்! ஒமர் அப்துல்லா

பாலகோட் சம்பவத்துக்குப் பிறகு எதிர்கட்சிகள் தங்கள் வேகத்தை இழந்துவிட்டது என்று ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஒருவேளை பாலகோட் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், உண்மையில் அச்சம்பவத்துக்குப் பிறகு எதிர்கட்சிகள் தங்கள் வேகத்தை இழந்துவிட்டது. இதுபோன்ற பல காரணங்கள் ஆலோசிக்கப்பட வேண்டியதாக உள்ளது. காவலரே திருடன் என்ற கோஷம் சரியானது என்றால் ரஃபேலில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு, ஊரக வளர்ச்சியின்மை உள்ளிட்டவை தொடர்பான பிரசாரங்களை மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்திருக்க வேண்டும். ஒருவேளை பாலகோட் சம்பவத்துக்கு பதிலாக புல்வாமா சம்பவம் தொடர்பான கேள்விகளை அதிகப்படுத்தியிருக்கலாம். எனவே ஆட்சியமைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com