மக்களவைத் தேர்தல்: பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக கூட்டணி 325 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித்ஷா, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். 

அதேசமயம் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com