விண்ணிலிருந்து  தரை இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

போர் விமானத்தில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகத்தை இந்திய விமானப் படை புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 விமானத்திலிருந்து புதன்கிழமை ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணை.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 விமானத்திலிருந்து புதன்கிழமை ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணை.


போர் விமானத்தில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகத்தை இந்திய விமானப் படை புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
இதுகுறித்து விமானப் படை செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி கூறியதாவது:
விண்ணிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகம், சுகோய்-30 விமானத்திலிருந்து ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. அந்த சோதனையின்போது, பிரம்மோஸ் ஏவுகணை மிகச் சிறந்த முறையில் இயங்கி, குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
இந்த ரகத்தைச் சேர்ந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதித்துப் பார்க்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அந்த ஏவுகணையை விமானத்துடன் இணைப்பது தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சிக்கலான காரியமாகும். மேலும், அந்த ஏவுகணையை இயக்குவதற்கு ஏற்ப விமானத்தின் மென்பொருள், மின்சாதன இணைப்புகள் ஆகிவற்றில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது என்றார் அவர்.
2,500 கிலோ எடையுடைய பிரம்மோஸின் விமான ஏவுகணை ரகம், 300 கி.மீ. தொலைவு வரை சென்று தரை இலக்குகளைத் தாக்க வல்லது. ஒலியைப் போல் 2.8 மடங்கு வேகத்தில் இந்த ஏவுகணை பாய்ந்து செல்லும்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்த வகை ஏவுகணையை இந்தியா சோதித்துப் பார்த்தபோது, ஒலியைப் போல் 2.8 மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையை செலுத்திய உலகின் முதல் விமானப் படை என்ற பெருமையை இந்திய விமானப் படை பெற்றது.
இந்த ரகத்துடன், பிரம்மோஸ் ஏவுகணையின் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ரகங்கள், கப்பல் எதிர்ப்பு ரகங்கள், விண்ணிலிருந்து விண் இலக்குகளை தாக்கும் ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இந்தியாவிடம் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com