சுடச்சுட

  

  அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை வெல்ல யாராலும் முடியாது: சிவசேனை

  By DIN  |   Published on : 24th May 2019 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivasena

  அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு வெல்ல முடியாத கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும்; பாஜக தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வார் என்று சிவசேனை கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. 
  இதுகுறித்து அக்கட்சியின் ஊடகமான "சாம்னா'வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பதாவது, நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலை வீசியுள்ளது. மோடிக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.  தற்போதைய நிலையில், அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என்ற உரிமைக்கட்டளையை மக்கள் பிறப்பித்து 
  விட்டனர். 
  கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட தற்போதைய வெற்றி சிறப்பானது.  மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கான வெற்றியை அவருக்கு வாரி வழங்கியுள்ளனர். இனிவரும் 5 ஆண்டுகளும் அவரது சீரிய தலைமையின் கீழ் நாடு வெற்றி நடைப்
  போடும் என்று அதில் தெரிவித்துள்ளார் அவர். 
  மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 340க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனை அங்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai