சுடச்சுட

  

  அத்வானி, ஜோஷியை சந்தித்து ஆசிபெற்ற மோடி கூறியது என்ன தெரியுமா?

  By DIN  |   Published on : 24th May 2019 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_meet_joshi,_advani

   

  மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி (68) தொடர்ந்து 2ஆவது முறையாக விரைவில் பதவியேற்கிறார். 

  இதையடுத்து, தனிபெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார். 

  இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது:

  பாஜக இன்று பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் அத்வானி போன்ற மிகப்பெரிய தலைவர், புதிய சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை கடந்த பல ஆண்டுகளாக மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்த்தது தான். 

  முரளி மனோகர் ஜோஷி மிகப்பெரிய அறிவாளியாக திகழ்பவர். நாட்டின் கல்வி தரத்தை உயர்த்தியதில் அவருடைய பங்கு மிகப்பெரியது. பாஜக-வை வலுப்படுத்துவதிலும், என்னைப் போன்ற காரியகர்த்தர்களை முறையாக பயிற்றுவித்து ஊக்குவிப்பதையும் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்.  

  இவர்களுடைய ஆசி பெற்றதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai