சுடச்சுட

  

  இனியும் இந்தியாவை ஆள தங்களுக்கு தான் உரிமை உண்டு என காங்கிரஸ் குரலெழுப்பக்கூடாது: அசாதுதீன் ஓவைஸி

  By DIN  |   Published on : 24th May 2019 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Asaduddin_Owaisi

   

  542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வென்றிருந்தது. மேலும் 12 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றார். இருப்பினும் பாரம்பரிய அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை சந்தித்தார். அதுபோன்று மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோல்வியைத் தழுவினர்.

  இந்நிலையில், இந்தியாவை ஆள தங்களுக்கு தான் உரிமை உண்டு என காங்கிரஸ் இனியும் குரலெழுப்பக்கூடாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

  மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்தபோது தான் பாஜகவை கட்டுப்படுத்த முடிந்தது. குறிப்பாக இம்முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கூட காங்கிரஸ், பாஜக இடையிலான நேரடிப் போட்டியில் பாஜக தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

  இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் இந்தியாவை ஆள தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றும், பாஜக-வை தங்களால் மட்டும் தான் வீழ்த்த முடியும் எனவும் காங்கிரஸ் கட்சி இனியும் குரலெழுப்பக் கூடாது. ஏனென்றால் அதனால் எந்த பலனும் இல்லை என்று குறிப்பிட்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai