சுடச்சுட

  
  sasitharoor

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.
  கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ள அவர் இது தொடர்பாக சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
  கிரிக்கெட் போட்டியில் தான் சதமடித்தும், அணி தோல்வியடைந்தால், ஒரு வீரர் எப்படி வருத்தப்படுவாரோ, அந்த மனநிலையில் நான் இப்போது உள்ளேன். கட்சியின் தோல்வி வருத்தமளிக்கிறது. அதே நேரத்தில் நான் வெற்றி பெற்றது சிறிது ஆறுதல் தருகிறது. இந்தச் சூழ்நிலையில் இருந்து மீள கொஞ்சம் கால அவகாசம் தேவை என்று அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
  திருவனந்தபுரத்தில் சசி தரூர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் தோல்வியடைந்தார். அத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai