சுடச்சுட

  
  bjp

  கோவாவில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் பனாஜி பேரவைத் தொகுதியை காங்கிரஸிடம் பாஜக இழந்துவிட்டது. அத்தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பாஜக வெற்றி பெற்று வந்தது.
  பாரிக்கர் மறைவை அடுத்து, அத்தொகுதிக்கு மே 19-ஆம் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் சித்தார்த் குன்கோலிங்கர் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அட்டாசியோ மோன்சிராட்டா களமிறங்கினார். மொத்தம் 75 சதவீத வாக்குகள் அத்தொகுதியில் பதிவாகியிருந்த நிலையில், வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், காங்கிரஸ் வேட்பாளர் 8,748 வாக்குகள் பெற்றார். பாஜகவுக்கு 6,990 வாக்குகளே கிடைத்தன. இதையடுத்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
  ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோவா பகுதி முன்னாள் தலைவர் வெலிங்கரின் கோவா சுரக்ஷா மஞ்ச் கட்சி 560 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சிக்கு 436 வாக்குகள் கிடைத்தன. கடந்த 2017 சட்டப் பேரவைத் தேர்தலின்போது பனாஜி தொகுதியில் பாஜக 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
  1994-ஆம் ஆண்டில் இருந்து அத்தொகுதி பாஜக வசமிருந்தது. இப்போது அதை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. "பாரிக்கர் இல்லாததால் கோவாவில் பாஜக பெரும் தவிப்பில் உள்ளது' என்று அத்தொகுதியில் வென்ற அட்டாசியோ
  கருத்துத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai