சுடச்சுட

  

  தேர்தலில் தோற்றவர்கள் தோல்வியாளர்கள் அல்ல:  மம்தா பானர்ஜி

  By DIN  |   Published on : 24th May 2019 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamta

  தேர்தலில் தோற்றவர்கள் அனைவரும் தோல்வியாளர்கள் அல்ல என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.
  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், அங்கும் திரிணமூல் காங்கிரஸூக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பாஜக குறிப்பிட்டத்தக்க அளவில் வெற்றி பெற்றுள்ளது.
  இந்நிலையில், சுட்டுரையில் இது தொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஆனால், தேர்தலில் தோற்றவர்கள் அனைவரும் தோல்வியாளர்கள் இல்லை. தேர்தல் முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் பிறகு, தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகக் கருத்துத் தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai