சுடச்சுட

  
  naveen

  ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்றதற்காக, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  நடந்து முடிந்த ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், நவீன் பட்நாயக் மீண்டும் வெற்றி பெற்று, ஐந்தாவது முறை ஆட்சியமைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. 
  இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், "ஒடிஸாவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நவீன் பாபுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி சிறப்பானதாக அமைய அவருக்கு எனது வாழ்த்துகள்' என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
  மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பட்நாயக்: இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
  ஜெகன் மோகனுக்கு மோடி வாழ்த்து: ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஆந்திரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றதற்காக ஜெகன் மோகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது ஆட்சிக் காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai