சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாய், மகன்!

  By DIN  |   Published on : 24th May 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election1

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.
  உத்தரப் பிரதேசத்தில் மத்திய அமைச்சரும், பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி.யுமான மேனகா காந்தி, இந்த முறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சந்திர பத்ர சிங் சோனுவை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
  இந்த தேர்தலில், மேனகா காந்தி 4,59,196 வாக்குகளும், சந்திர பத்ர சிங் சோனு 4,44,670 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் சிங் 41,681 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதேபோல்,  கடந்த 2014-இல் சுல்தான்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வருண் காந்தி, இந்த முறை, தனது தாயாரின் தொகுதியான பிலிபிட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர் ஹேம்ராஜ் வர்மாவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். வருண் காந்தி 7 லட்சம் வாக்குகளையும், ஹேம்ராஜ் வர்மா 4.48 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai