சுடச்சுட

  
  modi-mother

  குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வீட்டின் முன்பு பாஜக தொண்டர்கள், தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.
  மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க அமோக வெற்றியை பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, அவருக்கு எதிராக போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர் சாலினி யாதவை விட  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
  இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக, ஆமதாபாதில் உள்ள மோடியின் தாயார் வீட்டின் முன்பு பாஜகவினர் அதிக அளவில் குவிந்தனர். வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அதையடுத்து, வீட்டின் வெளியே வந்து ஆதரவாளர்களுக்கு ஹீராபென் வாழ்த்து தெரிவித்தார்.
  ஆமதாபாதில், பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியுடன் ஹீராபென் வசித்து வருகிறார். மோடி ஒவ்வொரு முறை குஜராத் செல்லும்போதும், தனது தாயைச் சந்தித்து ஆசி பெறுவார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai