சுடச்சுட

  

  வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூற விரும்பவில்லை: சரத் பவார்

  By DIN  |   Published on : 24th May 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SarathpowerC

  பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூற விரும்பவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
  முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தது.
  மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
  மக்களவைத் தேர்தலில் பாஜக சில மாநிலங்களில் சிறப்பான வெற்றியைப் பெறும் என்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்பார்த்ததுதான்.  ஆனால், தேசிய அளவில் பாஜக இதுபோன்ற மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து நான் சில சந்தேகங்களை எழுப்பியது உண்மைதான். ஆனால், இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூற விரும்பவில்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
  இந்தத் தோல்வி குறித்து கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசிக்கப்படும். அடுத்ததாக மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்காக எங்கள் கட்சி முழுவீச்சில் தயாராகும்.
  கடைசி கட்டத் தேர்தலுக்குப் பிறகு காவலர் (மோடி) குகையில் அமர்ந்து நிகழ்த்திய அதிசயத்தைப் பார்த்தோம். இதற்கு முன்பு இதுபோன்ற காட்சியை இந்திய அரசியலில் யாரும் பார்த்தது இல்லை. இது பாஜகவுக்கு எந்த அளவுக்கு பலனளித்தது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது என்றார் சரத் பவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai