சுடச்சுட

  

  எவ்வளவு பெரிய வெற்றியானாலும் மோடி இதை மட்டும் செய்ய முடியாது: பரூக் அப்துல்லா சவால் 

  By IANS  |   Published on : 24th May 2019 06:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farooq

   

  ஜம்மு: எவ்வளவு பெரிய வெற்றியானாலும் பிரதமர் மோடி இதை மட்டும் செய்ய முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித்   தலைவர் பரூக் அப்துல்லா, தான போட்டியிட்ட ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

  இந்நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியானாலும் பிரதமர் மோடி இதை மட்டும் செய்ய முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக ஜம்முவில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்  கூறியதாவது:

  பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மோடி எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் சரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவரால் அரசியல் சட்டப்பிரிவுகள் 35A மற்றும் 370 -ஐ நீக்கவே முடியாது.

  காங்கிரசின் தேர்தல் தோல்வி குறித்துக் கேட்கப்பட்ட போது, 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டிப்பாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு அமேதியில் ஜெயித்து மீண்டெழுந்து வருவார்' என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai