ஒடிஸாவில் 5ஆவது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்

ஒடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.
ஒடிஸாவில் 5ஆவது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்

ஒடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.
ஒடிஸா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இத்தேர்தலில் ஆரம்பம் முதலே பிஜு ஜனதா தளம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை காட்டிலும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்தனர்.
இரவு 9.00 மணி நிலவரப்படி, பிஜு ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 146 தொகுதிகளில் 113இல் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றிருந்தது.
இதற்கடுத்து பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றிருந்தன.
இதன்மூலம், பிஜேடி கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. 
இதனால் அந்த மாநில முதல்வராக பிஜேடி கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் விரைவில் பதவியேற்கவுள்ளார். ஒடிஸா முதல்வராக அவர் பதவியேற்க இருப்பது இது 5ஆவது முறையாகும்.
மக்களுக்கு நன்றி-நவீன் பட்நாயக்:  பிஜு ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்துள்ள ஒடிஸா மக்களுக்கு நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். புவனேசுவரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிஜு ஜனதா தளத்துக்கு மீண்டும் வாக்களித்து தங்களது ஆசீர்வாதத்தை அளித்துள்ள மாநில மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பாக, தேர்தலில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.
ஒடிஸாவில் உள்ள  பல்வேறு மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "பாஜகவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலையில் வாழ்த்து தெரிவித்தேன்' என்றார்.
தேசிய அரசியலில் பிஜு ஜனதா தளம் எத்தகைய பங்கு வகிக்கப் போகிறது எனக் கேட்கப்பட்டது. அதற்கு நவீன் பட்நாயக் பதிலளிக்கையில், "பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com