சிக்கிமில் ஆட்சியை கைப்பற்றியது எஸ்.கே.எம். கட்சி

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
சிக்கிம் மாநில சட்டப்பேரவையில் உள்ள 32 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆகியவை இடையே இழுபறி நிலவியது. இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை 
வகித்தன.
முடிவில், சிக்கிம் கிராந்திகாரி கட்சி 17 தொகுதிகளில் வென்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
சிக்கிமில் தனித்து ஆட்சியமைக்க 17 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாகும். அதன்படி, ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனவே சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி கட்சி விரைவில் ஆட்சியமைக்கிறது.
முதல்வர் பவன் குமார் சாம்லிங், சிக்கிம் முதல்வராக கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தார். அவரது ஆட்சிக்கு இந்தத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com