சுட்டுரையில் "காவலாளி' பட்டத்தை துறந்தார் மோடி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, சுட்டுரையில் தனது பெயருக்கு முன்பு "காவலாளி' என்று இணைத்திருந்த முன்பெயரை பிரதமர் நரேந்திர மோடி நீக்கினார்.
சுட்டுரையில் "காவலாளி' பட்டத்தை துறந்தார் மோடி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, சுட்டுரையில் தனது பெயருக்கு முன்பு "காவலாளி' என்று இணைத்திருந்த முன்பெயரை பிரதமர் நரேந்திர மோடி நீக்கினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, "நானும் நாட்டின் காவலாளி' என்று கூறி பாஜகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அனைவரும் சுட்டுரையில் தனது பெயரின் முன்பு காவலாளி(செளகிதார்) என்று இணைத்தனர். பிரதமர் நரேந்திர மோடியும், தனது சுட்டுரையில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி காவலாளி என்று முன்பெயர் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, அந்த முன்பெயரை மோடி நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "காவலாளி என்ற பெயரை சுட்டுரையில் இருந்து நீக்கியிருக்கலாம். 
அந்த வார்த்தை என்னுள் இணைந்த பகுதியாக உள்ளது. காவலாளியின் மனநிலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றும் இந்த மனநிலையை ஒவ்வொரு நொடியும் என்னுள் இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com