தில்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம்

தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடி விரைவில் முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார்.
தில்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம்

542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி (68) தொடர்ந்து 2-ஆவது முறையாக விரைவில் பதவியேற்கிறார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வென்றிருந்தது. மேலும் 12 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில், 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரள மாநிலம் வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி. சுனீரை 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

கட்சித் தொண்டர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். தோல்வியோ, வெற்றியோ அஞ்சத் தேவையில்லை. ஒருங்கிணைந்து போராடி காங்கிரஸ் சிந்தாந்தத்தை வெற்றி பெறச் செய்வோம். மக்களவைத் தேர்தலில் தோற்றுவிட்டதால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடி விரைவில் முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார்.

இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம் தில்லியில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com