தேர்தல் முடிவில் ஆர்வம் காட்டிய பாக். ஊடகங்கள்!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் வெளியிட்டு வந்தன.
தேர்தல் முடிவில் ஆர்வம் காட்டிய பாக். ஊடகங்கள்!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் வெளியிட்டு வந்தன.
இந்தியாவில் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முக்கியத் தலைவர்களின் வெற்றி, தோல்வி வரை அனைத்தையும் பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாகவும், முக்கியச் செய்திகளாகவும் வெளியிட்டன. 
தொகுதிகளில் யார் முன்னிலை வகிப்பது, எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் முக்கிய வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர், வெற்றி, தோல்வி குறித்து தலைவர்களின் கருத்துகள் என்று அனைத்தையும்  அந்நாட்டு ஊடகங்கள் நேரலையாக வெளியிட்டன. 
அண்டை நாட்டு தேர்தல் முடிவுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து நிமிடத்துக்கு நிமிடம், செய்தி வெளியிட்டு நேரலையாக முடிவுகளை தெரிவித்தது அந்நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்திய தேர்தல் முடிவில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. 
பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதும், இந்தியாவுடனான பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு பின்னரே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்தார்.
இதனிடையே,  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். அதையடுத்து பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது விமானப் படை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது. அதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேலும் மோசமடைந்தது. எல்லையில் போர் பதற்ற சூழல் உருவானது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடங்கியது முதல் தேர்தல் பிரசாரம் வரை அனைத்திலும் பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானுடன் கூட்டணி வைத்து செயல்படுவதாக பாஜகவும், காங்கிரஸூம் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரச்னை இருக்காது என இம்ரான் கான் தெரிவித்தது மேலும் சர்ச்சைகளை உருவாக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com