ராகுல் மற்றும் உ.பி. தோல்விகளுக்கு பொறுப்பேற்று காங். தலைவர்கள் ராஜிநாமா அறிவிப்பு

பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
ராகுல் மற்றும் உ.பி. தோல்விகளுக்கு பொறுப்பேற்று காங். தலைவர்கள் ராஜிநாமா அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் 2019-ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது சொந்த தொகுதியான அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி. சுனீரை 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆனால், தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், அமேதி தொகுதியின் காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தார். அமேதியில் தனக்கு வழங்கப்பட்ட பணியை சரியாகச் செய்யவில்லை. எனவே தோல்விக்கான தார்மீகப் பொறுப்பேற்று விலகுகிறேன் என்று அந்த ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஒரு இடத்தை தவிர்த்து (ரே பரேலியில் சோனியா வெற்றி) இதர இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. எனவே இந்த தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜ் பாபர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com