தில்லி காங்கிரஸ் தலைவரை சந்தித்து ஆசி பெற்றார் தில்லி பாஜக தலைவர்
By DIN | Published on : 25th May 2019 05:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை சந்தித்து ஆசி பெற்றார்.
17-வது மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இந்த முறையும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. வடகிழக்கு தில்லி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஷீலா தீட்சித் மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி போட்டியிட்டனர்.
இதில், மனோஜ் திவாரி சுமார் 3.65 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், மனோஜ் திவாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஷீலா தீட்சித்தை சந்தித்து இன்று (சனிக்கிழமை) ஆசி பெற்றார்.