சுடச்சுட

  
  PM_MOdi


  புது தில்லி: நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றிய பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பிரதமர் மோடி நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

  மக்களவைத் தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

  இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடி, அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் நன்றி உரையாற்றினார்.

  அப்போது அவர் பேசியதாவது, அரசின் பொறுப்புகளை உணர்ந்து உங்கள் கடமையை சிறப்பாக செய்தீர்கள். குடும்பத்தைக் கூட மறந்துவிட்டு அனைவரும் கால நேரம் இன்றி வேலை பார்த்தீர்கள். உங்கள் தியாகத்தை புரிந்து கொண்ட உங்கள் குடும்பத்தினருக்கும் எனது நன்றி.

  அடுத்த 5 ஆண்டுகளும் சிறப்பாக அமையும் வகையில்செயல்படுவோம். என்னுடன் 5 ஆண்டுகளும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல அடுக்கு, கூட்டுத் தலைமை என்பதற்கே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai