மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட 3-ஆம் பாலினத்தவர்கள்!

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 4 பேர் சுயேச்சையாக போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். 
மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட 3-ஆம் பாலினத்தவர்கள்!

நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. 

இந்த தேர்தலில் நாட்டிலேயே முதன்முறையாக மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 4 பேர் சுயேச்சையாக போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். இருந்த போதிலும், போட்டியிட்ட அனைத்து மூன்றாம் பாலினத்தவரும் 17-ஆவது மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவினர். 

மூன்றாம் பாலினத்தவரை வேட்பாளராக நிறுத்திய ஒரே கட்சியாக ஆம் ஆத்மி திகழ்கிறது. அக்கட்சி சார்பில் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மக்களவைத் தொகுதியில் பவானி மா எனும் பவானி நாத் வால்மிகி களமிறக்கப்பட்டார். அவர் மொத்தம் 1,845 வாக்குகளைப் பெற்றார்.

தமிழகத்தில் இருந்து தான் 17-ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதன்முறையாக 3-ஆம் பாலினத்தவரிடம் இருந்து வேட்புமனு பெறப்பட்டது. தென் சென்னை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட எம்.ராதா 1,042 வாக்குகளைப் பெற்றார்.

கேரளாவின் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அஸ்வதி ராஜப்பன் 494 வாக்குகள் பெற்றார்.

வடக்கு மும்பையின் மத்திய மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஸ்நேகா காலே 759 வாக்குகளைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com