திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம்: மம்தா நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ரங்சு ராய், அக்கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம்: மம்தா நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ரங்சு ராய், அக்கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் ராயின் மகனான 
இவர், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிஜ்ப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சட்டர்ஜி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்ததால், சுப்ரங்சு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார். 
சுப்ரங்ஷு ராய் இரண்டு முறை பிஜ்ப்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது தந்தை நிர்வாக திறன் மிக்கவர் என்றும், அவர்தான் தன்னை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
தன் மீதான நடவடிக்கை குறித்து சுப்ரங்சு கூறியதாவது: என் மனசாட்சிப்படி கூற வேண்டுமானால், நான் என்னுடைய தந்தையிடம் (முகுல் ராய்) தோற்று விட்டேன். அவர் தான் வங்காளத்தின் உண்மையான அரசியல் சாணக்கியன். எங்கள் கட்சிக்கு (திரிணமூல்) எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com