மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா 1.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா 1.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் அப்சல் அன்சாரியிடம்
மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா 1.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா 1.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் அப்சல் அன்சாரியிடம் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள யாதவ், தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகளே மனோஜ் சின்ஹாவின் இந்த மோசமான தோல்விக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
3 முறை எம்.பி.யாக இருந்த மனோஜ் சின்ஹா கடந்த முறை இத்தொகுதியில் 32,452 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். காஜிப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 18. 51 லட்சம் வாக்காளர்களில், யாதவ் சமூகத்தில் 3. 60 லட்சம் வாக்காளர்களும், தலித் சமூகத்தில் 2. 60 லட்சம் வாக்காளர்களும், 1. 60 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர். அதே நேரத்தில் மனோஜ் சின்ஹாவின் "பூமிஹார்' சமூகத்தில் அந்த தொகுதியில் வெறும் 55, 000 வாக்காளர்களே உள்ளனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டே, பகுஜன் சமாஜ் - சமாஜவாதி தலைமையிலான மகா கூட்டணி சார்பில் அப்சல் அன்சாரி நிறுத்தப்பட்டார். தேர்தலில் அன்சாரிக்கு 5.66 லட்சம் வாக்குகளும், மனோஜ் சின்ஹாவுக்கு 4.46 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.
கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில், தரமான சாலை வசதி, நால்வழிச் சாலை, நவீன ரயில் நிலையம், விளையாட்டு அரங்கம் உள்பட சுமார் 90 சதவீத வளர்ச்சித் திட்டங்களை காஜிப்பூர் தொகுதியில் மனோஜ் சின்ஹா நிறைவேற்றியிருந்தார். எனினும், ஜாதியஹ வாக்குகள் அவரது வெற்றியைப் பறித்துவிட்டன.
தோற்றத்தில் மிகவும் எளியவரான மனோஜ் சின்ஹா, எப்போதும் வெள்ளை நிற வேஷ்டியும், குர்தாவும் அணியக் கூடியவர். 
ஐஐடியில் கட்டடப் பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர், முக்கியத்துவம் வாய்ந்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தை கவனித்து வந்தார். முன்னதாக ரயில்வே இணையமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய மனோஜ் சின்ஹா சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com