சுடச்சுட

  

  தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி

  By DIN  |   Published on : 26th May 2019 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NitinGadkari-(2)

  மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு நீர் கிடைக்க வழி செய்திடும் கோதாவரி-கிருஷ்ணா- காவிரி நதிகள் இணைப்புத் திட்டமே முதல் பணியாக இருக்கும் என்று மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிதின் கட்கரி தெரிவித்தார்.
  16-ஆவது மக்களவையில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் நிதின் கட்கரி. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த நிலையில், செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்த நிதின் கட்கரி, மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றவுடன், கோதாவரி- கிருஷ்ணா- காவிரி நதிகளை இணைக்கும் திட்டமே முதல் பணியாக இருக்கும். இந்தத் திட்டத்தால் தமிழகத்துக்கு நீரைக் கொண்டு சேர்க்க முடியும் என்று தெரிவித்தார்.
  மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரிக்கு நீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்தத் திட்டம் குறித்து இப்போது நிதின் கட்கரியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிதின் கட்கரியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். மேலும், இத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
  காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காத நிலையில், கோதாவரி- கிருஷ்ணா இணைப்புத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு போதிய நீரைக் கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai