சுடச்சுட

  

  தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: இந்தியா-மியான்மர் எல்லையில் 2 பாதுகாப்புப் படை  வீரர்கள் பலி

  By DIN  |   Published on : 26th May 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா -மியான்மர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
  நாகாலாந்து மாநிலத்தில் இந்தியா - மியான்மர் எல்லையில் உள்ள மோன் பகுதியில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் 2 வாகனங்களில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டை தீவிரவாதிகள்  வெடிக்க செய்தனர்.
  இதையடுத்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை  வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 2 அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் பலியாகினர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
  காயமடைந்த 4 வீரர்களும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது.
  துப்பாக்கிச் சண்டையில் பலியான 2 வீரர்களில், ஒருவர் இளநிலை அதிகாரி ஆவார்.
  இந்த சண்டையைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையையும் பாதுகாப்புப் படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai