சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல: அசோக் சவாண்

  By DIN  |   Published on : 26th May 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ashokchavan

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு கட்சித் தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல; கட்சியைச் சேர்ந்த அனைவரும் இணைந்து கூட்டு பொறுப்பேற்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் சனிக்கிழமை தெரிவித்தார். 
  மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் சவாண், பாஜக வேட்பாளர் பிரதாப் சிக்லிகரிடம் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். 
  இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல. தேர்தல் பிரசாரம் என்பது கூட்டு பொறுப்புடையதாக கருதப்படுவதாகும். கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். மாநிலத்தின் மூத்த தலைவர்கள், இனி சற்றே அமைதி காத்து, புதிய அணி வசம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 
  முதலில் நானும், என்னுடன் உள்ள மற்ற தலைவர்களும் மகாராஷ்டிர காங்கிரஸின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்சிப்பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருக்கிறோம்.
  கட்சிக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஒவ்வொருவரும், தேர்தலில் கட்டாயம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு முடிவும் எடுக்கப்பட்டது. 
  இம்முறை, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்த, அறிக்கையை கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. 
  அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் தலைமையிலான விபிஏ கட்சியுடனும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்திருந்தால் 9 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். ஏனெனில், விபிஏ கட்சி பாஜகவின் "பி' அணியை போன்றது என்பதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இல்லை.  
  இருப்பினும், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெறும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். 
  மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், சந்திரப்பூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai