சுடச்சுட

  

  ம.பி. அரசைக் கவிழ்க்கும் எண்ணமில்லை: சிவ்ராஜ் சிங் செளஹான்

  By DIN  |   Published on : 26th May 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivarajsingh

  மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் விருப்பமில்லை என பாஜக தேசிய துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.
  மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 28-ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. இதனால், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தை ஆண்டுவரும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  இந்நிலையில், சிவ்ராஜ் சிங் செளஹான் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: குதிரைபேரம் போன்ற செயல்களில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளே பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன. மாநில அரசைக் கவிழ்க்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், மாநில காங்கிரஸ் அரசு தானாகக் கவிழ்ந்தால், எங்களால் எதுவும் செய்ய இயலாது. அண்மையில், பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதனால், அக்கட்சித் தலைவர் மாயாவதி கூட்டணிக்குள் ஏதேனும் செய்துவிட வாய்ப்புள்ளது. நான் உண்மையைத் தான் கூறுகிறேன். மாநில அரசைக் கவிழ்க்க விரும்பியிருந்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவே விட்டிருக்கமாட்டோம் என்றார் அவர்.
  மத்தியப் பிரதேசத்தில் குணா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட இருந்த லோகேந்திர சிங், அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து, மாநில அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவேன் என்று மாயாவதி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai