சுடச்சுட

  

  ஆந்திராவில் 32 சதவீத எம்எல்ஏ-க்கள் மீது அதிதீவிர குற்ற வழக்குகள்: ஏடிஆர் தகவல்

  By DIN  |   Published on : 26th May 2019 08:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Andhra_Assembly


  ஆந்திர சட்டப்பேரவையில் 174 உறுப்பினர்களுள் 96 உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் ஆய்வு தெரிவிக்கிறது. 

  ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 23 இடங்களில் வெற்றி பெற்றது. பவன் கல்யான் தலைமையிலான ஜன சேனா 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. 

  ஆந்தி பிரதேஷ் எலக்ஷன் வாட்ச் மற்றும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் (ஏடிஆர்) நடத்திய 175 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 174 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பிராமணப் பத்திரத்தை ஆய்வு செய்தது. இதில் 160 உறுப்பினர்கள் ஆண்கள், 14 உறுப்பினர்கள் பெண்கள். 

  இந்த 174 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 96 உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது (55 சதவீதம்). 55 உறுப்பினர்கள் மீது அதிதீவிர குற்ற வழக்குகள் உள்ளது (32 சதவீதம்). 

  குற்ற வழக்குகள்:

  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் 150 உறுப்பினர்களில் 86 உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள 23 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. ஜன சேனா உறுப்பினரான ஒருவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது. 

  அதிதீவிர குற்ற வழக்குகள்:

  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் 50 உறுப்பினர்கள் மீது அதிதீவிர குற்ற வழக்குகள் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியில் 4 உறுப்பினர்கள் மீது அதிதீவிர குற்ற வழக்குகள் உள்ளது. ஜன சேனா உறுப்பினர் மீதும் அதிதீவிர குற்ற வழக்குகள் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai