திருச்சானூரில் பக்தர்கள் காத்திருப்பு மண்டபம் திறப்பு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பக்தர்களுக்கான காத்திருப்பு மண்டபத்தை தேவஸ்தானம் திறந்துள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பக்தர்களுக்கான காத்திருப்பு மண்டபத்தை தேவஸ்தானம் திறந்துள்ளது.
பத்மாவதி தாயாரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்கள் தரிசன வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சானூரில் பக்தர்களுக்கான காத்திருப்பு மண்டபத்தை தேவஸ்தானம் புதிதாக அமைத்துள்ளது. அதில் 600 பக்தர்கள் வரை உட்கார இட
வசதி உள்ளது. இந்த மண்டபத்தில் குங்குமார்ச்சனை டிக்கெட், ரூ.100, ரூ.20 தரிசன டிக்கெட் விற்பனை செய்வதற்கான கவுன்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. காத்திருப்பு மண்டபம் சனிக்கிழமை பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சானூரில் உள்ள திருக்குளத்தில் விரைவில் லேசர் ஒளிக்கற்றை மூலம் அலங்காரம் செய்ய தேவஸ்தானம் முடிவு 
செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com