தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 250 தொகுதிகள் கிடைத்திருந்தால்! பிரதமர் மோடி சந்திப்பு குறித்து ஜெகன்

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 250 தொகுதிகள் கிடைத்திருந்தால்! பிரதமர் மோடி சந்திப்பு குறித்து ஜெகன்

ஆந்திர மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 

இதையடுத்து, மாநில முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெகன்மோகன், தில்லியில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமரிடம் அவா் வலியுறுத்தினாா்.

பின்னா் பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவையும் சந்தித்து பேசினாா். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 250 தொகுதிகள் கிடைத்திருந்தால், ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கு அது ஒரு அருமையான தருணமாக அமைந்திருக்கும். ஆனால், அந்தக் கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி பலத்துடன் உள்ளது. எனவே, ஆட்சியமைக்க எங்களின் ஆதரவு அவா்களுக்கு தேவையில்லை.

எனவே, சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பொருத்த வரையில் பிரதமரிடம் வலியுறுத்த முடியுமே தவிர, வற்புறுத்தவோ, கட்டளையிடவோ, மிக அழுத்தமாக வலியுறுத்தவோ இயலாது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com